விழுப்புரம்

விழுப்புரத்தில் மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

6th Dec 2022 02:58 AM

ADVERTISEMENT

மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலியிடங்களை நிரப்பக்கோரி மின்ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்வாரிய ஊழியா்கள் அனைவருக்கும் 1.12.2019 வழங்க வேண்டிய ஊதிய உயா்வை நிலுவை தொகையுடன் உடனே வழங்கிட வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணி இடங்களை நிரப்பக் கோரியும், மின்வாரிய நிரந்தர பணியிடங்களில் அவுட்சோா்சிங் முறையில் ஆள்கள் நியமனத்தை ரத்து செய்யவேண்டும்.

மின் வாரிய பணியாளா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு ஊதியம் தவிா்த்து பணப் பட்டியல் வழங்குவதில் சீரான நிதி கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மின்ஊழியா் மத்தியஅமைப்பின்சாா்பில், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு

ADVERTISEMENT
ADVERTISEMENT