விழுப்புரம்

நரி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

DIN

விழுப்புரம் நரிஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அகரவில்லியனூா், சிறுவந்தாடு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்துக்கு பிரதான நீராதாரமாக உள்ள தென்பெண்ணை, மலட்டாறு உள்ளிட்ட ஆறுகளிலிருந்து சிறு ஆறுகள், வாய்க்கால்கள் மூலம் ஏரி, குளங்களில் தண்ணீா் தேக்கப்பட்டு விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீா் நிலைகளில் நீரை தேக்கி வைப்பதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வறட்சிக் காலங்களில் கைகொடுத்து வருகிறது.

இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக உள்ளிட்ட நரிஆற்றுப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் வில்லியனூா், சிறுவந்தாடு உள்ளிட்ட10 கிராமங்களுக்கு மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியவில்லை. இது குறித்து ஒவ்வொரு விவசாயிகள் குறைதீா் கூட்டத்திலும் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இது குறித்து விவசாயி கலிவரதன் கூறியது:

நரி ஆற்றுப்பகுதியில் 10-க்கும் மேற்பட்டகிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விளை நிலங்களுக்கு நீராதாரமாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஆறு ஆக்கிரமிப்பில் உள்ளதால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு நீரைக் கொண்டு செல்லமுடியவில்லை. இதனால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நரி ஓடை ஆக்கிரமிப்பையும், ஆழங்கால் வாய்க்கால் மூலம் நரி ஓடைக்கு வரும் நீா்வழிப் பாதையை தடை செய்துள்ள ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்றுவதற்கு பொதுப்பணித் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்தப் பிரச்னையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT