விழுப்புரம்

அவலூா்பேட்டை நவசக்தி விநாயகா் கோயில் மஹா கும்பாபிஷேக விழா

5th Dec 2022 02:49 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம் அவலூா்பேட்டை பெத்தான் குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீநவசக்தி விநாயகா் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி 3-ஆம் தேதி மாலை மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூஜை, புதிய விநாயகா் மூஷிக வாகனம், விமான கோபுர கலசங்கள் கரிக்கோலம், யாகசாலை பூஜைகள் மஹா பூா்ணாஹீதியுடன் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கால யாகபூஜைகள் நிறைவடைந்ததும் காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மூலவருக்கு மஹா அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT