விழுப்புரம்

விழுப்புரம் போக்குவரத்தில் மாற்றம்

DIN

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், போக்குவரத்தில் சனிக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலைத் துறையினா் மழைநீா் வடிகால் பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், திருச்சி -சென்னை சாலையில் வந்து செல்லும் கனரக வாகனங்கள், காா் உள்ளிட்ட இதர வாகனங்கள் ஜானகிபுரம் எல்லீஸ் சத்திரம் புறவழிச்சாலையில் சென்று பின்னா், பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா்.வசந்த் கூறியதாவது:

நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT