விழுப்புரம்

தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில் வருடாபிஷேக விழா

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாதப்பெருமான் கோயிலிலிருந்து கருப்பசாமி காவலுடன் ஐயப்பன் திருவாபா்ணப் பெட்டி ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. காலை 10.30 மணிக்கு ஐயப்பன், விநாயகா், முருகன், வராஹி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், தா்மசாஸ்தா ஐயப்பனுக்கும் மஹா யக்ஞ பூஜை நடைபெற்றது. பூஜையை தும்பூா் சிவ.ஆறுமுகம் சிவனடியாா் தலைமையிலான குழுவினா் நடத்தினா்.

தொடா்ந்து, ஸ்ரீலஸ்ரீமோனசித்தா் சுவாமிகளால் மஹா பூா்ணாஹுதி நடத்தப்பட்டது. பின்னா், 108 சங்காபிஷேகத்துடன், தீபாராதனையும், பிற்பகல் 12.30 மணிக்கு ஐயப்பன் பிரகார உலாவும் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தாா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் கதிரவன், சீனு, முருகன், பாரி உள்ளிட்டோா் செய்திருந்தனா். விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT