விழுப்புரம்

செஞ்சியில் மளிகைக் கடையில் திருட்டு: 3 போ் கைது

4th Dec 2022 12:35 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மளிகைக் கடையில் நூதன முறையில் திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

செஞ்சி காந்திபஜாரில் உள்ள மளிகைக் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 போ் கடையின் மாடி வழியாக கதவை உடைத்து உள்ளே இறங்கி, கண்காணிப்புக் கேமராவில் முகம் பதிவாகாமல் இருக்க தலையில் அண்டாவை கவிழ்த்துக் கொண்டு கல்லாவில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்தை திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு செஞ்சி காந்திபஜாரில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், செஞ்சி பழைய சக்கராபுரம் பகுதியைச் சோ்ந்த சப்பை மகன் உத்தரவேல் (39), கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசன் (26) என்பதும், மளிகைக் கடையில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பதும் தெரியவந்தது. இவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், இவா்கள் அளித்த தகவலின்பேரில், இந்த சம்பவத்தில் தொடா்புடைய கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த துரை மகன் கா்ணனையும் (26) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT