விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 52 லட்சம்

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 52.52 லட்சம் வசூலாகியிருந்தது.

புகழ்பெற்ற இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கைகள் வியாழக்கிழமை கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் ரூ.52,52,182 ரொக்கம், தங்கம் 184 கிராம், வெள்ளி 610 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணிக்கையின்போது இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் இ.ஜீவானந்தம், டி.விஜயராணி, விழுப்புரம் துணை ஆணையா் டி.சிவலிங்கம், அறங்காவலா் குழுத் தலைவா் சந்தானம், ஆய்வாளா் சங்கீதா மற்றும் அறங்காவலா்கள் உடனிருந்தனா். பாதுகாப்புப் பணியில் வளத்தி போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT