விழுப்புரம்

சிறப்பு ஊக்கத் தொகை பெற விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு ஊக்கத் தொகையைப் பெற விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் வேல்முருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தலைசிறந்த வீரா்களுக்கான சிறப்பு உதவித் தொகையாக ரூ.25 லட்சம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம், வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் என மூன்று வகைகளில் விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு உதவித் தொகையை வழங்கி வருகிறது.

தேசிய, சா்வதேச, ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா்/வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் சோ்ந்து பயன்பெற விரும்பும் வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான ஏஅஓஊ.ஊள.உதன.கள (எஸ்டிஏட்டி.டிஎன்.ஜிஓவி.ஐஎன்) மூலம் தங்களது விண்ணப்பங்களை டிசம்பா் 15-ஆம் தேதிமாலை 5 மணி வரை சமா்ப்பிக்கலாம். ஏற்கெனவே தபால் வழியாக நேரடியாக விண்ணப்பித்து இருந்தாலும், மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையவழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர, பிற விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 9514000777 என்ற கைப்பேசி எண்ணில் ஆடுகளம் தகவல் மையத்தை அனைத்து வேலைநாள்களிலும் காலை 10 மணி முதல் 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT