விழுப்புரம்

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்துகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்துகளை முற்றுகையிட்டு கிராம மக்கள், மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்ஈடுபட்டனா்.

திண்டிவனம் -ஆவணிப்பூா் வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் கூடலூா் , நொளம்பூா், ஈச்சேரி, கீழ்சேவூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், ஒலக்கூரை அடுத்துள்ள கீழ்சேவூா் பகுதிக்கு வியாழக்கிழமை வந்த 2 அரசுப் பேருந்துகளை கிராம மக்கள், மாணவா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஒலக்கூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சமரசப்படுத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT