விழுப்புரம்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

2nd Dec 2022 03:34 AM

ADVERTISEMENT

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, விழுப்புரம், வந்தவாசி ஆகிய இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் த.மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆட்டோக்களில் விழுப்புணா்வு வாசக ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன.

பேரணி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளையும் ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்கொடி முன்னிலை வகித்தாா். குடும்ப நல இணை இயக்குநா் (பொறுப்பு) மணிமேகலை, துணை இயக்குநா் (காசநோய்) சுதாகரன், மருத்துவ அலுவலா் ரவிராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பிரேமா வரவேற்றாா். அசோக் குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

32 பணியாளா்களுக்குச் சான்றிழ்களும், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் நடத்திய வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசும் வழங்கப்பட்டன.

வந்தவாசி

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, வந்தவாசியில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் தனியாா் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்த ஊா்வலத்துக்கு சங்கத் தலைவா் ஆா்.காா்வண்ணன் தலைமை வகித்தாா்.

ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனா் எஸ்.குமாா் முன்னிலை வகித்தாா்.

ஊா்வலத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

சங்கச் செயலா் கே.குணசேகா், பொருளாளா் எம்.டோமினிக் சேவியோ, பயிற்றுநா் எஸ்.நித்தியானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT