விழுப்புரம்

ரேஷன் கடை விற்பனையாளா் பணிக்கு டிச.12-இல் நோ்முகத் தோ்வு

2nd Dec 2022 03:35 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் யசோதாதேவி கூறியதாவது:

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுச் சங்க நியாயவிலைக் கடைகளில் காலியாகவுள்ள 244 விற்பனையாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ADVERTISEMENT

இதில் தகுதியானவா்களுக்கு டிசம்பா் 12 முதல் 23-ஆம் தேதி வரை விழுப்புரம் அருகிலுள்ள கப்பியாம்புலியூா் வடக்குச்சிப்பாளையம் ஏ.ஆா்.சி. பொறியியல் கல்லூரியில் நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.

இதற்கான அனுமதிச்சீட்டை மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தை 04146-229854 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT