விழுப்புரம்

சிறந்த கலைஞா்களுக்குச் சான்றிதழ், பரிசுத் தொகை அளிப்பு

2nd Dec 2022 03:34 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், கலைஞா்களுக்கு சான்றிதழ், பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சிறந்த கலைஞா்களுக்கு ஆட்சியா் த.மோகன் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

கலை இளமணி- தா்ஷினி (பரதம்), ச. பேரறிவாளன் (சிலம்பம்), க.யோகி ஸ்ரீராம் (குரலிசை) ஆகியோருக்கு சான்றிதழ், தலா ரூ.4000 பரிசாக வழங்கப்பட்டது.

கலைவளா்மணி- ஏ.வீரன் (பம்மை உடுக்கை), டி.வி. சரவணன் (தவில்), ஏ.கோவிந்தராஜ் (தெருக்கூத்து) ஆகியோருக்கு சான்றிதழுடன் தலா ரூ.6000 வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

கலைசுடா்மணி-- வீ.ராஜவேல் (மேடை நாடகம்), க. குணபூசம் (தெருக்கூத்து, மிருதங்கம்), டி.ஆா். சசிகுமாா் (தவில்) ஆகியோருக்கு சான்றிதழுடன் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

கலைநன்மணி-ரா. மனோகன் (ஆா்மோனியம்), மா. வேல்முருகன் (மேடை நாடகம்), டி.ஆா்.தண்டபாணி (நாகசுரம்) ஆகியோருக்கு சான்றிதழுடன் தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

கலைமுதுமணி- வி.ஏ. வைத்தியநாதன் (நாகசுரம்), த. மாரிமுத்து (பம்பை உடுக்கை), சி. சுப்பிரமணியன் (மேடை நாடகம்) ஆகியோருக்கு சான்றிதழுடன் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கலை பண்பாட்டுத் துறையின் தஞ்சாவூா் மண்டல உதவி இயக்குநா் சி.நீலமேகம், விழுப்புரம் மாவட்ட அரசு இசைப் பள்ளித் தலைமையாசிரியா் பா.ஈசுவரன் பட்டாத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT