விழுப்புரம்

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

2nd Dec 2022 03:33 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், அரகண்டநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் முகையூா் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 1,305 பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

விசாரணையில், புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவா்கள் விழுப்புரம் மாவட்டம், ஏமப்பூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ரா. கருணாகரன் (20), ரா.பாத்திபன் (19) என்பது தெரிய வந்தது. இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT