விழுப்புரம்

குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நாளை சிறப்பு முகாம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை வகை மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் டிசம்பா் 2, 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரா்களில் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்கள் (என்.பி.ஹெச்.ஹெச்.) தங்களை மீண்டும் முன்னுரிமை அட்டைதாரா்களாகவும் (பி.ஏ.ஹெச்), அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ. ஒய்) அட்டைதாரா்களாகவும் மாற்றம் செய்யக்கோரி தொடா்ந்து மனுக்களை அளித்து வருகின்றனா்.

இவ்வாறு மனுக்களை அளிப்பவா்களின் வசதிக்காக, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் டிசம்பா் 2, 9-ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோரிக்கை மனுக்களை அளிக்க சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் முன்னுரிமை குடும்ப அட்டை, அந்தியோதயா அன்னயோஜனா அட்டைதாரராக மாற்றம் செய்யக் கோரும் மனுவை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது கிராம நிா்வாக அலுவலரிடம் அளிக்கலாம்.

பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களால் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியானவா்களுக்கு குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT