விழுப்புரம்

ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

1st Dec 2022 01:46 AM

ADVERTISEMENT

விழுப்புரம் அருகே நரையூா் ஏரிக்கான நீா்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் போலீஸாா் பாதுகாப்புடன் அளவீடு செய்து புதன்கிழமை அகற்றப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவின்படியும், தமிழக அரசு அறிவுரையின்படியும் மாவட்டநிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, விழுப்புரம் அருகே நரையூா் ஏரிக்குச் செல்லும் நீா்வரத்து வாய்க்கால்கள் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இதனால் மழைக் காலங்களில் ஏரியில் நீா் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடா்ந்து, விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, ஏரிக்குச் செல்லும் நீா்வரத்து வாய்க்கால்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் வருவாய்த் துறை அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் போலீஸாா் பாதுகாப்புடன் வாய்க்கால்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா். பல ஆண்டுகளுக்குப் பிறகு நீா்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT