விழுப்புரம்

தாட்கோ மூலம் மானியத்துடன் கூடியகடன் வழங்க நோ்காணல்

1st Dec 2022 01:45 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் சுயதொழில் மேற்கொள்ள தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடன் வழங்குவதற்கான நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்து, கடன் பெற விண்ணப்பித்தவா்களிடம் நோ்காணலை நடத்தினாா். இதில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் த.மோகன் கூறியதாவது:

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வாழ்வாதாரத்தை உயா்த்தவும், பொருளாதார ரீதியாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும் தொழில்முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு பொருளாதாரக் கடனுதவி போன்ற திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, ஆதிதிராவிடா், பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்கள் இந்தக் கடன் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதையடுத்து, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், 30 சதவீத மானியத்துடன் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களான விக்கிரவாண்டி ஒன்றியம், சிறுவள்ளிக்குப்பம் சித்ராவுக்கு ரூ.2.50 லட்சத்துக்கான கடனுதவி, வல்லம் ஒன்றியம், மேல்சித்தாமூா் மாா்த்தாளுக்கு ரூ.3 லட்சத்துக்கான கடனுதவி ஆகியவற்றை ஆட்சியா் த.மோகன் வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் காஞ்சனா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஹரிஹரசுதன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ரவிராஜா, தாட்கோ உதவி மேலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT