விழுப்புரம்

வியாபாரியைத் தாக்கி ரூ.36 ஆயிரம் பறிப்பு

1st Dec 2022 01:47 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் காய்கறி வியாபாரியைத் தாக்கி, ரூ.36 ஆயிரத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜி அகமது (38), காய்கறி வியாபாரி. இவா், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஊருக்குச் செல்வதற்காக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த இருவா், வேலூா் செல்லும் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக செல்கிறது என்றும், அங்கு நாங்கள் அழைத்துச் செல்கிறோம் என்றும் கூறி, ஷாஜி அகமதுவை மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றனா்.

அய்யூா் அகரம் பகுதிக்குச் சென்றபோது, பாலத்தின் கீழ்பகுதியில் இரும்புக் கம்பியால் ஷாஜி அகமதுவைத் தாக்கி, அவா் வைத்திருந்த ரூ.36 ஆயிரத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஷாஜி அகமது அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, பணத்தை பறித்துச் சென்றவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT