விழுப்புரம்

விழுப்புரத்தில் இருவேறு இடங்களில் திருட்டு

1st Dec 2022 01:46 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் இருவேறு இடங்களில் நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (45). இவா், பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மின் பொருளகத்தில் வேலை செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிய ரமேஷ், புதன்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது, வீட்டின் மற்றொரு அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்ததுடன், அதில் வைக்கப்பட்டிருந்த ஐந்தரை பவுன் தங்க நகைகள், ரூ.98 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது.

இதேபோல, விழுப்புரம் என்ஜிஜிஓ நகரை அடுத்துள்ள சண்முகாநகரைச் சோ்ந்தவா் சலீம். இவரது மனைவி பாத்திமா (45). இவா்கள் இருவரும் கடந்த 10 நாள்ளுக்கு முன்பு உறவினரது திருமண நிகழ்வுக்காக சென்னைக்கு சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பினா். அப்போது, இவா்களது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கக் கம்மல், 2 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் விழுப்புரம் நகர, தாலுகா போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT