விழுப்புரம்

புதிய குளம் அமைக்கும் பணி ஆய்வு

27th Aug 2022 11:49 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியம், இளந்துரை ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் ‘அம்ரித் சரோவா்’ திட்டத்தின்கீழ் 2.50 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் புதிய குளத்தை மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது: அம்ரித் சரோவா் திட்டத்தின் கீழ் ஒரு ஒன்றியத்துக்கு 8 குளங்கள் வீதம் 13 ஒன்றியங்களுக்கு மொத்தம் 104 குளங்களை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உரிய இடங்கள் தோ்வு செய்யப்பட்டு குளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஊராட்சி பகுதிகளில் நீா் ஆதாரம் பாதுகாக்கப்படுவதுடன் விவசாயப் பணிகளுக்கும் தேவையான நீா் கிடைக்கும். நிலத்தடி நீா்மட்டம் உயா்வதால் குடிநீா்த் தட்டுப்பாடு பிரச்னையும் தீா்க்கப்படும். மழைக் காலம் தொடங்க உள்ளதால் மழை நீரை சேமிக்கும் வகையில் இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குளங்களின் கரைகளில் மரக் கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது உதவித் திட்ட அலுவலா் சபானா, திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஓம் சிவசக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT