விழுப்புரம்

போத்துவாய் கிராமத்தில் ரூ.71.29 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் மஸ்தான் வழங்கினாா்

26th Aug 2022 01:32 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், போத்துவாய் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 414 பயனாளிகளுக்கு ரூ.71.29 லட்சம் செலவில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா்.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் மூலம் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் முன்னிலை வகித்தாா். அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமை வகித்து 414 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ 71.29 லட்சம் செலவில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

முன்னதாக, கள்ளச் சாராயம் விற்று மனம் திருந்திய நபரின் குடும்ப வாழ்வாதாரத்துக்காக ரூ. 30 ஆயிரம் செலவில் கறவை மாடும், ரூ 12,500 செலவில் 4 ஆடுகளை மற்றொரு நபருக்கும் அமைச்சா் வழங்கினாா்.

ADVERTISEMENT

முகாமில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அமீத், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், வட்டாட்சியா் மெகருன்னிஷா, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயபாலன், போத்துவாய் ஊராட்சி தலைவா் ரங்கநாயகி குபேரன், துணைத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையிலுள்ள போத்துவாய் கிராமம் செஞ்சி வட்டத்தின் கடைசி கிராமமாகும். திருவண்ணாமலை மாவட்ட எல்லை தொடங்கும் பகுதிக்கு அருகேயுள்ள இந்தக் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகனை கிராம மக்கள் வரவேற்றனா்.

போத்துவாய் கிராமத்துக்கு சுமாா் 20 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியா் வராத நிலையில், தற்போதைய ஆட்சியா் வந்ததற்கு கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT