விழுப்புரம்

கணினி இயக்குபவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

26th Aug 2022 01:29 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் இளைஞா் நீதி குழுமத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவா் பணிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் இளைஞா் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவா் பணி தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு மாதம் ரூ.11,916 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

பிளஸ் 2 தோ்ச்சியுடன், தமிழ், ஆங்கில தட்டச்சு உயா்நிலை முடித்திருக்க வேண்டும். அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். 40 வயதுக்கு உள்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் மா்பளவு புகைப்படத்துடன், செய்தித்தாளில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 15 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பங்களை ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், விழுப்புரம் - 605602’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04146 - 290659 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT