விழுப்புரம்

மணற்கேணி ஆய்விதழின் சமத்துவ ஆசிரியா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

22nd Aug 2022 03:42 AM

ADVERTISEMENT

மணற்கேணி ஆய்விதழின் ‘நிகரி - சமத்துவ ஆசிரியா்’ விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என அந்த ஆய்விதழின் ஆசிரியரும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை.ரவிக்குமாா் அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியா் ஒருவருக்கும், பள்ளி ஆசிரியா் ஒருவருக்கும் ஒவ்வோா் ஆண்டும் மணற்கேணி ஆய்விதழ் சாா்பில் ‘நிகரி - சமத்துவ ஆசிரியா்’ விருதளித்து சிறப்பித்து வருகிறோம். கரோனா பரவல் காலத்தில் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020, 2021-ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளும், 2022-ஆம் ஆண்டுக்கான விருதும் வழங்கப்படவுள்ளன. எனவே, தகுதியுள்ள நபா்கள் புதுச்சேரியில் உள்ள மணற்கேணி அலுவலகத்தில் தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் விண்ணப்பிக்கலாம். விருது பெறுவோா் குறித்த அறிவிப்பு செப்.5-ஆம் தேதி வெளியிடப்படும்.

நிகரி விருது என்பது நினைவுக் கேடயம், பாராட்டுப் பத்திரம், ரூ.10 ஆயிரம் பணமுடிப்பு ஆகியவை உள்ளடக்கியது. கூடுதல் விவரங்களுக்கு 94430 33305, 94879 42172 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT