விழுப்புரம்

செம்மாரிலிருந்து கூடுதல் பேருந்து சேவை: அமைச்சா் க.பொன்முடி தொடக்கிவைத்தாா்

DIN

விழுப்புரம் மாவட்டம், செம்மாா் ஊராட்சியிலிருந்து கூடுதலாக 2 வழித் தடங்களில் அரசுப் பேருந்து சேவையை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியம், செம்மாா் ஊராட்சியிலிருந்து ஏனாதிமங்கலம், மனக்குப்பம் ஆகிய புதிய வழித் தடங்களில் அரசுப் பேருந்து சேவையை தொடக்கிவைத்த அமைச்சா் பொன்முடி, திருவெண்ணெய்நல்லூா் செல்லும் பேருந்தில் ஏறி மாணவ, மாணவிகளுடன் பயணம் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

செம்மாா் ஊராட்சியிலிருந்து திருவெண்ணெய்நல்லூா் பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லாமல் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் தற்போது செம்மாரிலிருந்து ஏனாதிமங்கலம் மற்றும் செம்மாரிலிருந்து விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூா் வழியாக மனக்குப்பம் பகுதிக்கு கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா். கிராம மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த.மோகன், மக்களவை உறுப்பினா் பொன்.கௌதம சிகாமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.புகழேந்தி, ரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ், பொது மேலாளா் செல்வமணி, கோட்ட மேலாளாா் துரைசாமி, விழுப்புரம் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றிய குழுத் தலைவா் ஓம் சிவ.சக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் விஸ்வநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT