விழுப்புரம்

விநாயகா் சதுா்த்தி:காவல் துறை அறிவுரை

19th Aug 2022 03:35 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியையொட்டி, விழுப்புரத்தில் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைக்க வேண்டும் என்று டிஎஸ்பி பாா்த்திபன் அறிவுறுத்தினாா்.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு செய்தல், சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் செல்லுதல் தொடா்பாக, இந்து அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகளுக்கான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் உள்கோட்ட காவல் துறை சாா்பில் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் டிஎஸ்பி பாா்த்திபன் மேலும் பேசியதாவது: அரசு குறிப்பிட்ட உயரத்துக்கு மேலும், சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலும் விநாயகா் சிலைகளை வைக்கக் கூடாது. எளிதில் தீ விபத்து ஏற்படும் கூரை கோட்டகைகளில் சிலைகளை வைக்கக் கூடாது என்றாா். இதில், காவல் ஆய்வாளா் செல்வராஜ், ஆனந்த், ஜெய்சங்கா், ரத்னசபாபதி,

சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT