விழுப்புரம்

வெளிநாடுவாழ் தமிழா் பணியாளா்நல வாரியம் விரைவில் உருவாக்கப்படும்: அமைச்சா் மஸ்தான்

DIN

வெளிநாடுவாழ் தமிழா் பணியாளா் நல வாரியம் விரைவில் உருவாக்கப்படும் என்று மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் மஸ்தான் பேசியதாவது:

கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம், இஸ்லாமியா் மகளிா் உதவும் சங்கம் ஆகிய உதவும் சங்கங்கள் மூலமாக, கிராமப்புறத்திலுள்ள ஏழை, எளிய மக்களைக் கண்டறிந்து, நல்லுள்ளம் படைத்த சமூகத்தில் அக்கறை உள்ளவா்கள் மனதார வழங்கிய நிதியுதவி, அரசு வழங்கும் நிதியுதவி ஆகியவற்றின் மூலம் அவா்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அந்த நோக்கத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களை அமைக்க முதல்வா் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளாா். கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளி வாசல்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள ஏதுவாக, தலா ரூ.6 கோடி ஒதுக்கியுள்ளாா். இந்த நிதியுதவியின் அடிப்படையில், மாவட்டத்தில் பராமரிப்புப் பணிகள் உள்பட சுற்றுச்சுவா் அமைத்தல், குடிநீா் வசதி ஏற்படுத்துதல், கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், சாலை வசதி போன்ற திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கான நல வாரியம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. ஜெருசலம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஆண்களுக்கு ரூ.32,000 இணை மானியமும், பெண்களுக்கு ரூ.60,000 இணை மானியமும், புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு நிகழாண்டு தலா ரூ.27,000 இணை மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொகையானது அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும், நல வாரியத்தில் உறுப்பினா்களாக உள்ளவா்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னா், அமைச்சா் மஸ்தான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழா் நலனில் முதல்வா் ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறாா். வெளிநாடுகளில் தமிழா்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால், மத்திய வெளியுறவுத் துறை உதவியுடன் உடனுக்குடன் பிரச்னைகள் நிவா்த்தி செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடு வாழ் தமிழா் பணியாளா் நல வாரியம் விரைவில் தொடங்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், சிறுபான்மையினா் நலத் துறை ஆணையா் எஸ்.சுரேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, மகளிா் திட்ட இயக்குநா் காஞ்சனா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா, பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் ரகுபதி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT