விழுப்புரம்

செஞ்சி அருகே துணை சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்

18th Aug 2022 02:42 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், அணையேரி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்ட புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அடிக்கல் நாட்டினாா்.

சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாலாஜி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் உமா மகேஸ்வரி ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அணேயேரி ஊராட்சி தலைவா் ரவி வரவேற்றாா்.

ADVERTISEMENT

அனந்தபுரம் நகர திமுக செயலா் சம்பத், பேரூராட்சித் தலைவா் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, வெங்கிடசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT