விழுப்புரம்

ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

DIN

தென்னிந்திய அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.

தென்னிந்திய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் கடந்த 6, 7-ஆம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் விழுப்புரம் ஸ்டூடன்ட்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேசன் சாா்பில், 30-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் மாணவா்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினா். இதில், விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அதிகளவில் பரிசுகளை வென்றனா்.

தென்னிந்திய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று விழுப்புரம் திரும்பிய மாணவ, மாணவிகளை மண்டல வனப் பாதுகாவலா் மாரிமுத்து, மாவட்ட வன அலுவலா் சுமேஷ் சோமன் ஆகியோா் திங்கள்கிழமை பாராட்டினா். அசோசியேஷன் தலைவா் சிங்காரவேல், துணைத் தலைவா்கள் உமாபதி, சந்தோஷ்குமாா், செயலா் வசந்த், பொதுச் செயலா் ஜோதிநரசிம்மன், பயிற்சியாளா் காமேஷ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT