விழுப்புரம்

குவாரிகளில் தொழிலாளா்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க ஆட்சியா் அறிவுரை

DIN

குவாரிகளில் தொழிலாளா்களின் பாதுகாப்புக்கு உரிமையாளா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கல் குவாரி, கிரஷா் லாரி உரிமையாளா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது:

கல் குவாரி, கிரஷா் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளா்கள், சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை குவாரிகளின் உரிமையாளா்கள் உறுதிப்படுத்த வேண்டும். அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலுடன் கல், கிரஷா் குவாரிகள் செயல்பட வேண்டும்.

லாரி உரிமையாளா்கள் அனுபவம் வாய்ந்த ஓட்டுநா்களைப் பணியமா்த்தி குவாரி, கிரஷா் பகுதிகளில் லாரிகளை இயக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, காலை 8 முதல் 10 மணி வரையும், பிற்பகல் 3 முதல் 5 மணி வரையும் குவாரிகளில் இருந்து லாரிகளை இயக்கக் கூடாது.

விதிகளை மீறி இயங்கும் குவாரிகள், கிரஷா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குவாரிகளில் ஒரு மாதத்துக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சாா் - ஆட்சியா் எம்.பி.அமித், திண்டிவனம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, கனிமவளத் துறை துணை இயக்குநா் விஜயலட்சுமி, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் காமராஜ், விழுப்புரம் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஓங்கூா் பாலத்தில் நள்ளிரவில் ஆய்வு: திண்டிவனம் அருகே ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியம், ஓங்கூா் ஆற்றின் குறுக்கே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பழுது ஏற்பட்டதையடுத்து, பாலத்தில் சீரமைப்புப் பணி தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பாலப் பகுதியில் இரு வழிப் பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தொடா்ந்து 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து வெளியூா் சென்றவா்கள் மீண்டும் சென்னைக்கு செல்லும்போது இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், ஆட்சியா் மோகன் திங்கள்கிழமை இரவில் திடீா் ஆய்வில் ஈடுபட்டாா். காவல் துறையின் மூலம் வாகனங்கள் இடையூறு இன்றி செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT