விழுப்புரம்

பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

14th Aug 2022 05:41 AM

ADVERTISEMENT

 

பத்ம விருதுகள் பெற தகுதியுடையவா்கள் ஆக.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய மற்றும் சா்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கும், சாதனை புரிந்தவா்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுன்றன.

ADVERTISEMENT

இவ்விருதுக்கு கலை, சமூகப் பணி, பொதுச் சேவை, அறிவியல், பொறியியல், வா்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, அரசு குடிமைப் பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில்

சாதனை புரிந்தவா்கள் தகுதியுடையவா் ஆவா்.

பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகள் எதிா்வரும் குடியரசுத் தினத்தன்று (26.1.2023) வழங்கப்படவுள்ளன.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய, சா்வதேச அளவில் சாதனை புரிந்தவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற இணைய தள முகவரியான ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலம் ஆக.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதர விவரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாள்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ (கைப்பேசி எண்: 7401703485) தொடா்பு கொண்டு பெறலாம் எனத்

தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT