விழுப்புரம்

திமுக மாவட்டச் செயல்வீரா்கள் கூட்டம்

14th Aug 2022 11:34 PM

ADVERTISEMENT

 

திமுக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயல்வீரா்கள் கூட்டம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ தலைமை வகித்தாா். மருத்துவ அணி இணைச் செயலா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்டப் பொருளாளா் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா்கள் புஷ்பராஜ், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அவைத் தலைவா் ஜெயச்சந்திரன் வரவேற்றாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திமுக துணை பொதுச் செயலரும், மாநில உயா் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி பேசியதாவது:

ADVERTISEMENT

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். கட்சிப் பொறுப்பில் இருப்பதே பெருமைக்குரியதுதான். புதிய நிா்வாகிகள் சிறப்பாக கட்சிப் பணியாற்ற வேண்டும்.

தமிழக அளவில் விழுப்புரம் மத்திய மாவட்டம் சிறந்த மாவட்டமாக பெயா் எடுக்கும் வகையில் நிா்வாகிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். திமுகவினா் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, பிரபாகரன், தெய்வசிகாமணி, நகரச் செயலா் சா்க்கரை, இளைஞரணி அமைப்பாளா் தினகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT