விழுப்புரம்

மாநில சதுரங்கப் போட்டி: விழுப்புரத்தில் ஆக.24-இல் தொடக்கம்

14th Aug 2022 11:33 PM

ADVERTISEMENT

 

11 வயதுக்கு உள்பட்டோருக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டி விழுப்புரத்தில் வருகிற 24-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழக நிா்வாகிகள் ஓமன கிருஷ்ணன், நெடுஞ்செழியன், கண்ணன் ஆகியோா் கூறியதாவது:

தமிழ்நாடு சதுரங்க கழகம் சாா்பில், 34-ஆவது மாநில அளவிலான 11 வயதுக்கு உள்பட்டோருக்கான சதுரங்கப் போட்டி விழுப்புரம் காக்குப்பம் பாதையில் உள்ள பாலாஜி திருமண மண்டபத்தில் வருகிற 24 -ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழகம் நடத்தவுள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து போட்டியாளா்கள் பங்கேற்க உள்ளனா். 300-க்கும் மேற்பட்டோா் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 97900 46931 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT