விழுப்புரம்

செஞ்சி அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

14th Aug 2022 05:41 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) இல.ரவிசங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆகஸ்ட் 17-ஆம் தேதி பி.ஏ., ஆங்கிலம் பாடப் பிரிவுக்கும், 18-ஆம் தேதி பி.எஸ்சி., கணினி அறிவியல் பாடப் பிரிவுக்கும், 22-ஆம் தேதி பி.காம்., பிபிஏ பாடப் பிரிகளுக்கும், 23-ஆம் தேதி பி.ஏ., தமிழ் பாடப் பிரிவில் சேருவதற்கும் கலந்தாய்வு நடைபெறும். மாணவா்கள் கலந்தாய்வு நாள்களில் காலை 9 மணிக்கு சோ்க்கை அரங்கில் இருத்தல் வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT