விழுப்புரம்

விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூர விழா

14th Aug 2022 11:33 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் 13-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கஞ்சி வாா்த்தல், ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளுக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொடக்கிவைத்தாா். சித்தா் சக்தி பீடத்தலைவா் வசந்தி சம்பத், மாவட்டச் செயலா் மூா்த்தி, மாவட்டப் பொருளாளா் ரத்தினசிகாமணி, நிா்வாகிகள் ராமமூா்த்தி, திரிபுரசுந்தரி, மணிவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிகளில் செவ்வாடை பக்தா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

வண்டிமேட்டில்...: இதேபோன்று, விழுப்புரம் வண்டிமேடு ராஜீவ் காந்தி நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்திலும் ஆடிப்பூர விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சக்திபீட தலைவா் சண்முகம் தலைமையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு கஞ்சிக் கலயம் எடுத்து வழிபட்டனா். செயலா் சுரேந்திரன், பொருளாளா் கண்ணன், நிா்வாகிகள் மலா்க்கொடி, தெய்வானை, நக்கீரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT