விழுப்புரம்

எல்லீஸ்சத்திரத்தில் ரூ.75 கோடியில்புதிய தடுப்பணை: அமைச்சா் க.பொன்முடி தகவல்

DIN

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரத்தில் தென்பெண்ணை ஆற்றிலுள்ள சேதமடைந்த தடுப்பணை அருகே ரூ.75 கோடியில் புதிய தடுப்பணை விரைவில் கட்டப்படும் என்று மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியம், ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைமைவாய்ந்த எல்லீஸ் தடுப்பணையில் சேதமடைந்த பகுதிகளை அமைச்சா் பொன்முடி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஏனாதிமங்கலம் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1950-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தடுப்பணை 70 ஆண்டு கால பழைமை வாய்ந்ததாகும். இந்தத் தடுப்பணையின் மூலம் மழைநீா் சேகரிப்பட்டு, பல்வேறு கிராமங்களுக்குத் தேவையான குடிநீா், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு பெய்த பலத்த மழையால் தடுப்பணையில் பாதிப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தர அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு முழுமையாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால், கூடுதலாக ரூ.1.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தர முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவசர கதியில் பணிகளை மேற்கொண்டால், மீண்டும் பழுது ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், சீரமைப்புப் பணிகள் தாமதமாகின்றன. மேலும், இந்தப் பகுதியில் ரூ.75 கோடியில் புதிய தடுப்பணை அமைப்பதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சாத்தனூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீா் வீணாக கடலில் சென்று சோ்வதை தடுக்கும் வகையில், தண்ணீா் செல்லும் வழித்தடங்களில் உள்ள சிறு கால்வாய்களின் வழியே நீரைப் பெற்று விவசாயப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் பொன்முடி.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொதுப் பணித் துறை (நீா்வளம்) செயற்பொறியாளா் ஷோபனா, திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஓம் சிவ சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT