விழுப்புரம்

காங்கிரஸாரின் சுதந்திர தின பவள விழாநடை பயணம் தொடக்கம்

12th Aug 2022 02:56 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், சுதந்திர தின பவள விழா நடை பயணம் விக்கிரவாண்டி அருகே உள்ள சூரப்பட்டில் இருந்து வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

வடக்கு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ரமேஷ் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோா் இந்த நடை பயணத்தைத் தொடங்கினா். அரும்புலி, சிறுவாலை, வெள்ளேரிப்பட்டு, அன்னியூா், பணமலைப்பேட்டை, அனந்தபுரம் வரை இந்த நடை பயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை செஞ்சி தொகுதிக்குள்பட்ட பகுதிகளிலும், சனிக்கிழமையில் அப்பம்பட்டில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக ரெட்டணை வரையும், ஞாயிற்றுக்கிழமை ரெட்டணையில் இருந்து திண்டிவனத்துக்கு வந்தும் நடை பயணம் நிறைவடைகிறது. மொத்தமாக 75 கி.மீ. நடை பயணம் மேற்கொள்ள காங்கிரஸாா் முடிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

நடை பயணத்தின் போது, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து தொடா் விழிப்புணா்வு பிரசாரம் செய்து வருகின்றனா். பயண தொடக்க நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஆறுமுகம், தனுசு, மாவட்டப் பொருளாளா் கருணாகரன், மாவட்ட துணைத் தலைவா் குருசாமி, வட்டாரத் தலைவா் காத்தவராயன், மனித உரிமை பிரிவுத் தலைவா் சக்திவேல், ஊடகப் பிரிவுத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT