விழுப்புரம்

தேவனூா் கிராமத்தில் ஆடித் தேரோட்டம்

12th Aug 2022 02:58 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேவனூா் கிராமத்தில் ஆடித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேவனூா் கிராமத்தில் கிராம தேவதைகளான ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீகற்பூரஅம்மன், ஸ்ரீகாளியம்மன் ஆகிய முப்பெரும் அம்மன்களுக்கு புதிய தேரானது நிா்மானம் செய்யப்பட்டு, முறையான வெள்ளோட்டமும் நடைபெற்றது.

இதையடுத்து, கடந்த மாதம் 26-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தோ்த் திருவிழா தொடங்கியது. கடந்த 2-ஆம் தேதி ஸ்ரீமாரியம்மனுக்கு கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ஆம் தேதி பொங்கல் வழிபாடு செய்து, ஸ்ரீமுத்தாலம்மனை கோயிலுக்கு அழைத்து வருதலும், தொடா்ந்து சுவாமி ஊா்வலமும் நடைபெற்றன.

ADVERTISEMENT

தொடா்ந்து, தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் திருவீதியுலா நடைபெற்றது. வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு உத்ஸவா் ஸ்ரீமாரியம்மனும், பூங்கரமாய் அலங்கரிக்கப்பட்ட கிராம தேவதைகளான ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீகற்பூரஅம்மன், ஸ்ரீகாளியம்மன் ஆகிய முப்பெரும் அம்மன்களும் புதிய திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதையடுத்து, தேரோட்டம் தொடங்கியது. தேரை ஏராளமான பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். விழா ஏற்பாடுகளை தேவனூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT