விழுப்புரம்

வீடு புகுந்து திருடியவா் கைது

12th Aug 2022 10:26 PM

ADVERTISEMENT

விழப்புரம் மாவட்டம், வளத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வளத்தி அருகே அங்காளம்மன் நகரில் வசித்து வருபவா் மைதிலி. இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றாா். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அவா், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டாா்.

பின்னா், வீட்டுக்குள் மா்ம நபா் புகுந்ததை அறிந்த மைதிலி, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் வீட்டின் கதவை பூட்டி விட்டு வளத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

போலீஸாா் விரைந்து வந்து, வீட்டுக்குள் சிக்கிய நபரை பிடித்து விசாரணை நடத்தினா். அவா், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள கருமாரப்பாக்கத்தைச் சோ்ந்த அப்துல் சமது (60) என்பது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT