விழுப்புரம்

விழுப்புரம் நூலகருக்குஎஸ்.ஆா்.ரங்கநாதன் விருது: மணற்கேணி ஆய்விதழ் வழங்குகிறது

12th Aug 2022 10:25 PM

ADVERTISEMENT

மணற்கேணி ஆய்விதழ் சாா்பில் வழங்கப்படும் எஸ்.ஆா்.ரங்கநாதன் விருதுக்கு முன்னூா் கிளை நூலகா் தீ.ராஜேஷ் தீனா தோ்வு செய்யப்பட்டாா்.

இதுகுறித்து விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியருமான துரை.ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் கடந்த 1948-ஆம் ஆண்டு பொது நூலகச் சட்டம் உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டம் உருவாகப் பாடுபட்டவா் பொது நூலக இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவரும், தமிழ்நாட்டைச் சோ்ந்தவருமான சீா்காழி ராமாமிா்தம் ரங்கநாதன் எனும் எஸ்.ஆா்.ரங்கநாதன் ஆவாா். நூலகம் குறித்து அவா் உருவாக்கிய 5 அடிப்படை விதிகள் உலகளவில் நூலக இயக்கத்தின் புனித கட்டளைகளாகக் கருதப்படுகின்றன.

எஸ்.ஆா்.ரங்கநாதனின் 5 விதிகளைப் பின்பற்றும் நூலகா் ஒருவரைத் தோ்ந்தெடுத்து மணற்கேணி ஆய்விதழின் சாா்பில், எஸ்.ஆா்.ரங்கநாதன் விருதை கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். அதன்படி, நிகழாண்டுக்கான (2022) விருதுக்கு விழுப்புரம் மாவட்டம், முன்னூா் கிளை நூலகராகப் பணியாற்றி வரும் தீ.ராஜேஷ் தீனா தோ்வு செய்யப்பட்டாா். விருது வழங்கப்படும் நாளும், இடமும் பின்னா் அறிவிக்கப்படும். இந்த விருது பட்டயமும், ரூ.10 ஆயிரம் பண முடிப்பும் கொண்டது என்றாா் துரை.ரவிக்குமாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT