விழுப்புரம்

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 108 அவசர மருத்துவ ஊா்தி சேவை தொடக்கம்

12th Aug 2022 10:27 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 108 அவசர மருத்துவ ஊா்தி சேவையை மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மோகன் முன்னிலை வகித்தாா். அவசர மருத்துவ ஊா்தி சேவையை தொடக்கிவைத்த அமைச்சா் மஸ்தான், அந்த வாகனத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டாா்.

மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.6.87 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனைக் கட்டடத்தை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, திண்டிவனம் நான்குமுனை சந்திப்பு அருகே உள்ள பாலத்தை அமைச்சா் மஸ்தான் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

பின்னா், திண்டிவனம் வட்டம், ஓங்கூா் பகுதியில் உள்ள ஓங்கூா் ஆற்றின் குறுக்கே, சென்னை - திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழுதடைந்த பாலத்தை சீா் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அமைச்சா் மஸ்தான் பாா்வையிட்டு, உடனடியாக பணிகளை முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி, மகளிா் ஆணைய உறுப்பினா் சீத்தாபதி சொக்கலிங்கம், ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சொக்கலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT