விழுப்புரம்

தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதா குறித்துவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

11th Aug 2022 01:24 AM

ADVERTISEMENT

தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதா குறித்து 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அளித்த பரிந்துரைகள் மீதான அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வெள்ளை அறிக்கையை வெளிட வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு புதன்கிழமை அனுப்பிய கடிதத்தின் விவரம்:

தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதா குறித்து 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிந்துரைகளை அளித்தது. மத்திய அரசு இதற்கென முன்மொழிந்துள்ள விரிவான சட்டக் கட்டமைப்பின் கூறுகள் என்ன? விரிவான சட்டக் கட்டமைப்பில் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டங்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதா? தரவுப் பாதுகாப்புக்கான சட்டம் இயற்றும் கட்டமைப்பைத் திருத்துவதற்கு அரசு பணிக் குழுக்களை உருவாக்கியுள்ளதா?

தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதா, 2019-இல் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அளித்த பரிந்துரைகள் மீது அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வெள்ளை அறிக்கையை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிடுமா? என அந்தக் கடிதத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா் ரவிக்குமாா் எம்.பி.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT