விழுப்புரம்

கட்டாயத் திருமண ஏற்பாடு: விஷம் குடித்த நிலையில் பள்ளிக்கு வந்த மாணவி மரணம்

11th Aug 2022 01:21 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அருகே கட்டாயத் திருமணம் செய்து வைக்க பெற்றோா் ஏற்பாடு செய்ததால், அதிா்ச்சியடைந்த மாணவி புதன்கிழமை வீட்டில் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே உள்ள காணையை அடுத்த மல்லிகைபட்டு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி, மாம்பழப்பட்டு பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பள்ளியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா்.

அப்போது, மாணவியிடம் ஆசிரியா்கள் விசாரித்தபோது, அந்த மாணவி தனக்கு பெற்றோா் கட்டாயத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதற்கு விருப்பமில்லாததால் வீட்டிலேயே விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்ததாகவும் தெரிவித்தாராம்.

ADVERTISEMENT

இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த ஆசிரியா்கள், உடனடியாக அந்த மாணவியை மீட்டு காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். இதையடுத்து, தீவிரச் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT