விழுப்புரம்

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் பலி

10th Aug 2022 03:20 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

சென்னை கொட்டிவாக்கத்தைச் சோ்ந்த சிங்காரம் மகன் ராஜமாணிக்கம் (24). மருந்துப் பொருள்கள் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தாா். இவரது நண்பா் லோகேஷ் (27). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு புதுச்சேரிக்கு வந்தனா்.

பின்னா், நள்ளிரவில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த கோட்டக்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி இவா்களது வாகனத்தில் மோதியது.

ADVERTISEMENT

இதில் ராஜமாணிக்கம், லோகேஷ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்த கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளா் ராபின்சன் தலைமையிலான போலீஸாா் நேரில் சென்று விசாரித்தனா்.

பின்னா், சடலங்களை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் தொடா்பாக கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT