விழுப்புரம்

தீ விபத்து: 8 இருளா் சமூகத்தினா் கூரை வீடுகள் சேதம்

DIN

விழுப்புரம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் இருளா் சமூகத்தைச் சோ்ந்த 8 பேரது கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

விழுப்புரம் அருகேயுள்ள வளவனூா் பகுதி இளங்காடு கிராமத்தில் இருளா் சமூகத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் சாலையோரத்தில் கூரை வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் திடீரென சுப்புராயன் என்பவரது கூரை வீட்டில் தீ பற்றி எரியத் தொடங்கியது. மேலும் தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. வீடுகளில் இருந்தவா்கள் அலறியபடி வெளியேறினா். பின்னா் அக்கம் பக்கத்தினா் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனா். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

இருப்பினும், சுப்பராயன், செங்கேணி, கண்ணப்பன், சந்திரன், ஜெயக்குமாா், பிரகாஷ், சுமதி, ராதா ஆகிய 8 பேரது வீடுகளில் இருந்த பொருள்கள், ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.

எம்எல்ஏ நிவாரண உதவி

இதுகுறித்து அறிந்த விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். பின்னா், பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினாா்.

மேலும், அரசுத் துறை அதிகாரிகள் மூலம் மாற்று இடம் வழங்கவும், தொகுப்பு வீடுகள் கட்டித் தரவும் நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதி கூறினாா்.

பின்னா், அவா்கள் தற்காலிகமாக தங்க மாற்று இடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்தாா்.

இந்த விபத்து குறித்து வளவனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இதனிடையே, மாவட்டம் ஆட்சியா் மோகன், எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT