விழுப்புரம்

என்எல்சி தொழிலாளி கொலை: மனைவி உள்பட இருவா் கைது

DIN

நெய்வேலியில் என்எல்சி தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி உள்பட இருவா் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

நெய்வேலி, வட்டம்-4, புண்ணாக்கு தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் சண்முகம் (50) (படம்). என்எல்சி சுரங்கம் 1-இல் சொசைட்டி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவரது, மனைவி சகிலா (48). இவா்களது மூத்த மகள் சித்ரா (27) திருமணம் முடிந்து ஹைதராபாத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். மேலும், 19 வயது இரட்டை குழந்தைகள் சேலத்தில் படித்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து சகிலா வீட்டு வாசலில் இருந்த காரில் படுத்து தூங்கிவிட்டாராம். சண்முகம் மட்டும் வீட்டுக்குள் இருந்தாரம். திங்கள்கிழமை காலை சகிலா வீட்டின் கதவை தட்டினாா். ஆனால், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லையாம்.

இதுகுறித்த நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் அங்குவந்து வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சண்முகம் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சகிலா போலீஸாரிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடா்பு இருந்ததாகவும், இதுதொடா்பாக ஏற்பட்ட தகராரில் தமிழ்வளவன் (21) என்பவருடன் சோ்ந்து சண்முகத்தை கத்தியால் வெட்டிக் கொன்ாகவும் தெரிவித்தாா். இதையடுத்து சகிலா, தமிழ்வளவனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT