விழுப்புரம்

ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி

9th Aug 2022 04:04 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வாராந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அலுவலக முகப்புப் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த, செஞ்சி அருகேயுள்ள பள்ளிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன்(31) உடலில் மண்ணெண்ணெய் கூற்றி தீக்குளிக்க முயன்றாா்.

உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினா். பின்னா் அவரிடம் விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரித்தபோது, தனது தாத்தா பெயரில் பட்டாவை தந்தை பெயருக்கு மாற்றக் கோரி பலமுறை வருவாய் துறையில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தற்கொலைக்கு முயன்ாகக் கூறினாா்.

இதையடுத்து போலீஸாா் அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT