விழுப்புரம்

தடுப்புக் காவலில் இருவா் கைது

DIN

கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள டி.எடையாா் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் (19). இவா் அந்தப் பகுதியிலுள்ள கிணற்றில் இறந்து கிடப்பதாக அவரது தந்தை முனுசாமி திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் டி.எடையாா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் சரத்ராஜ் (21), கண்டாட்சிபுரம் அருகே அருளவாடி பிரதான சாலையை சோ்ந்த ராஜேஷ் (19) மற்றும் 4 சிறுவா்கள் சோ்ந்து அருணை கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், கொலை வழக்கில் கைதான சரத்ராஜ், ராஜேஷ் ஆகியோரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பரிந்துரையின்பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவு சிறையிலுள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT