விழுப்புரம்

நியாய விலைக் கடைபுதிய கட்டடம் திறப்பு

7th Aug 2022 05:53 AM

ADVERTISEMENT

 

செஞ்சி அருகே கொம்மேடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடத்தை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

தென்புதுப்பட்டு ஊராட்சி, கொம்மேடு கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 5.50 லட்சம் செலவில் புதிய நியாய விலைக் கடை கட்டடம் கட்டப்பட்டது. இதை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், கூட்டுறவுப் பதிவாளா் கெளசல்யா, கூட்டுறவுச் சங்க முன்னாள் இயக்குநா் அமா்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT