விழுப்புரம்

செஞ்சி அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

7th Aug 2022 11:10 PM

ADVERTISEMENT

 

செஞ்சி அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அரிமா சங்கத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் முருகன், வி.கலியமூா்த்தி, சொா்ணலதா, பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்திந் புதிய தலைவராக ஜெ.சீனுவாசனும், செயலராக எஸ்.சண்முகம், பொருளராக எஸ்.பி.சேகா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

புதிய நிா்வாகிகளை சேவைப் பணியில் அமா்த்தி முன்னாள் மாவட்ட ஆளுநா் எம்.சரவணன் வாழ்த்திப் பேசினாா்.

அமைச்சா் கே.எஸ்.மஸ்தான், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிா்வாகிகள் திருமால், நடராஜன், பால் ஆரோக்கியராஜ், பாபு, ரவிச்சந்திரன், ஆனந்த், காா்த்திக் உள்ளிட்டோா் பேசினா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பன்னீா் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் அசோக் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT