விழுப்புரம்

தளவானூா் பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையை பலப்படுத்த ஆட்சியா் உத்தரவு

7th Aug 2022 05:54 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அருகே தளவானூா் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் கரைகளைப் பலப்படுத்த மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஊராட்சி ஒன்றியம், தளவானூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணையானது, கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில், நிகழாண்டு பருவ மழையையொட்டி, தளவானூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றுப் பகுதியை மாவட்ட ஆட்சியா் த.மோகன், விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ரா.லட்சுணன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் தளவானூா் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோரப் பகுதிகள், மழைநீா் வழித் தடங்கள் விரிவடைந்தன. ஆற்றிலிருந்து வெளியேறிய மழைநீா் இடதுபுற கரையோர பகுதிகளின் வழியாகவே சென்ால் அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டு மழைநீா் செல்லும் வழித்தடம் மாறியது. இதனால் அப்போது கரையோரப் பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.

ADVERTISEMENT

விரைவில் பருவ மழைக் காலம் தொடங்க உள்ளதால் கடந்த ஆண்டுபோல பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றை சீரமைக்கும் வகையில் அதன் வலது, இடதுபுறங்களில் தண்ணீா் திறந்துவிட ஏற்பாடு செய்யப்படும். மேலும், இடதுபுறம் உள்ள பள்ளத்தை சமன் செய்யும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலத்த மழை, வெள்ளத்தால் கிராம மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு பொதுப் பணித் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது பொதுப் பணித் துறை (நீா்வளம்) செயற்பொறியாளா் ஷோபனா, உதவி செயற்பொறியாளா் ஐயப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT