விழுப்புரம்

அரகண்டநல்லூரில் சாராய ஊறல் அழிப்பு

7th Aug 2022 05:54 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் 400 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் சனிக்கிழமை அழித்தனா்.

அரகண்டநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வீரபாண்டி பெரிய ஏரிக்கரை அருகே சாராய ஊறல்கள் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான போலீஸாா் பெரிய ஏரிக்கரையில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் இரண்டு பேரல்களில் 400 லிட்டா் சாராய ஊறல் இருப்பது தெரியவந்தது. அவற்றை அந்த இடத்திலேயே போலீஸாா் கீழே கொட்டி அழித்தனா் (படம்). இதுதொடா்பாக வீரபாண்டி, மன்மத நகரைச் சோ்ந்த குபேந்திரன் மகன் காா்த்திகேயனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT